Enable Javscript for better performance
தமிழக அரசின் விலையில்லா பொருள்கள் வழங்கல்- Dinamani

சுடச்சுட

    

    தமிழக அரசின் விலையில்லா பொருள்கள் வழங்கல்

    By திருப்பரங்குன்றம்  |   Published on : 30th September 2015 07:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருப்பரங்குன்றத்தை அடுத்த பாண்டியன்நகரில் தமிழக அரசின் விலையில்லா பொருள்கள் வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.  

    மதுரை மாநகராட்சி 97 ஆவது வார்டு பகுதியான ஹார்விபட்டி, திருநகர் பாண்டியன் நகர் பகுதிகளில் தமிழக அரசின் விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி வழங்கும் விழா நடைபெற்றது.

     நிகழ்ச்சிக்கு குடியிருப்போர் நலச்சங்கத் தலைவர் வி.சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். கூட்டுறவு சங்க துணைத் தலைவர்கள் மணி, அம்மாவாசை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கிராம நிர்வாக அதிகாரி கென்னடி வரவேற்றார். மாமன்ற உறுப்பினர்  நாகலெட்சுமி பாண்டுரங்கன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.எம்.சீனிவேல் ஆகியோர் பயனாளிகள் 5400 பேருக்கு விலையில்லா பொருள்களை வழங்கினர். நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கத்தலைவர் வேல்ராஜ், பழனிச்சாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai