Enable Javscript for better performance
தீப்பிடித்து பெண் சாவு- Dinamani

சுடச்சுட

    

    தே.கல்லுப்பட்டி அருகே வீட்டில் விளக்கு கீழே விழுந்து தீப்பற்றியதில் பெண் உயிரிழந்தார்.

    தே.கல்லுப்பட்டி அருகேயுள்ளது கொட்டாணிபட்டி. இவ்வூரைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி அழகம்மாள்(25). சுப்பிரமணி கொடைக்கானலுக்கு  வேலைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அழகம்மாள் தூங்கிக்கொண்டிருந்த போது, விளக்கு கீழே விழுந்து தீப்பிடித்ததில் அழகம்மாள்  படுகாயமடைந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை காப்பாற்றி திருமங்கலம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் திங்கள்கிழமை உயிரிழந்தார்.

     இதுகுறித்து சுப்பிரமணி கொடுத்த புகாரின் பேரில் தே.கல்லுப்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai