Enable Javscript for better performance
தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்க தடைகோரி வழக்கு- Dinamani

சுடச்சுட

    

    தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்க தடைகோரி வழக்கு

    By மதுரை  |   Published on : 30th September 2015 07:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க வரிவசூலிக்கத் தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

     திருநெல்வேலி மாவட்டம் தென்காசி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. டி.எஸ்.ஆர். வெங்கட்ரமணா இம்மனுவைத் தாக்கல் செய்துள்ளார். மனு விவரம்:

     இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் 60 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஒரு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் மையம் (டோல்கேட்) அமைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பாகவும், வேகமாகவும் செல்ல வேண்டும் என்ற நோக்கத்துக்காகவே தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டது.

     60 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஒரு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் மையம் அமைத்ததன் மூலம் தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டதன் நோக்கம் முறியடிக்கப்பட்டுள்ளது. சுங்க கட்டணம் மூலம் ஆண்டுக்கு ரூ.16 ஆயிரத்து 500 கோடி கிடைக்கிறது. ஒவ்வொரு லிட்டர் டீசல், பெட்ரோலுக்கும் மத்திய அரசு சாலைநிதி வசூலிக்கிறது. இந்த தொகை ஆண்டுக்கு 25 ஆயிரம் கோடியாகும். இந்தியாவில் ஆண்டுக்கு 6 கோடி வாகனங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த வாகனங்களின் விற்பனை மூலம் மட்டும் அரசுக்கு ரூ.1 லட்சம் கோடி விற்பனை வரி கிடைக்கிறது. எனவே சுங்க கட்டணம் வசூலிக்க வேண்டிய அவசியம் கிடையாது.

     மகாராஷ்டிரம் உள்ளிட்ட சில மாநிலங்களில் சுங்க கட்டணம் வசூலிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.

    மேலும் சுங்க கட்டணம் வசூலிக்கும் உரிமை மாநில அரசுக்கே உள்ளது. ஆனால் தேசிய நெடுஞ்சாலைகள் சட்டத்தின் கீழ் சுங்க கட்டண நிர்ணயம் மற்றும் வசூல் தொடர்பான விதியை மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது. இது சட்டவிரோதமானது என்பதால் இந்த விதியை செல்லாது என அறிவிக்க வேண்டும். சுங்க கட்டணம் வசூலிக்கத் தடை விதிக்க வேண்டும் எனக்குறிப்பிட்டு உள்ளார்.

     இம்மனு நீதிபதிகள் ஆர்.சுதாகர்,வி.எம்.வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. மனு மீதான விசாரணையை நீதிபதிகள் அக்.5ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai