Enable Javscript for better performance
நாகர்கோவில் கொலை வழக்கில் 2 பேர் சரண்- Dinamani

சுடச்சுட

    

    நாகர்கோவில் பகுதியில் நடந்த கொலை தொடர்பாக மதுரை நீதிமன்றத்தில் இருவர் செவ்வாய்க்கிழமை சரணடைந்தனர்.

     கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நேசமணிநகர் காவல்நிலைய எல்கைக்குள் நடந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீஸார் சிலரைத் தேடிவந்தனர்.  இந்நிலையில் நாகர்கோவில் நெசவாளர் காலனியைச் சேர்ந்த ராஜசேகரன் (32), இளஞ்செழியன் (38) ஆகியோர் செவ்வாய்க்கிழமை மதுரை 3 ஆவது மாஜிஸ்திரேட்  நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இருவரையும் 15 நாள் காவலில் வைக்கும்படி மாஜிஸ்திரேட்  தனஞ்செயன் உத்தரவிட்டார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai