Enable Javscript for better performance
பாம்பு கடித்து பெண் சாவு- Dinamani

சுடச்சுட

    

    மதுரை மாவட்டம் சோழவந்தானில் பாம்பு கடித்து பெண் உயிரிழந்தார். 

     சோழவந்தான் பூ மேட்டுத் தெருவை சேர்ந்தவர் மகாலிங்கம் மனைவி அகிலாண்டம்(52). இவர் திங்கள்கிழமை இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவரை பாம்பு கடித்துள்ளது.

    உயிருக்கு ஆபத்தான நிலையில் சோழவந்தான் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.

    இது குறித்து மகாலிங்கம் அளித்த புகாரின் பேரில் சோழவந்தான் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai