Enable Javscript for better performance
மதுரையில் மிடுக்கான நகர்த்திட்ட வாக்குப்பதிவுக்கு கால நீட்டிப்பு- Dinamani

சுடச்சுட

    

    மதுரையில் மிடுக்கான நகர்த்திட்ட வாக்குப்பதிவுக்கு கால நீட்டிப்பு

    By மதுரை  |   Published on : 30th September 2015 07:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுரை நகரில் மிடுக்கான நகர்த்திட்ட ஆலோசனை கூறும் வாக்குப்பதிவுக்கான காலம் சனிக்கிழமை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

     மதுரை மாநகர், மிடுக்கான நகர்த்திட்டத்தின் கீழ் மத்திய அரசால் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்போடு ஆண்டுக்கு தலா ரூ.200 கோடி என நகரை மேம்படுத்தும் திட்டங்கள் ஐந்தாண்டுகளுக்கு நிறைவேற்றப்படவுள்ளது.

    திட்டங்களை செயல்படுத்த பொதுமக்கள் ஆலோசனையைப் பெறும் வகையில் இணையம், முகநூல் வசதிகளையும், நேரடியாக மக்கள் கருத்துக்கூறும் வகையில் 25 இடங்களில் வாக்குப்பதிவு மையங்களையும் மாநகராட்சி நிர்வாகம் அமைத்துள்ளது.

    வாக்குப்பதிவு மையங்களில் மக்கள் செவ்வாய்க்கிழமை (செப்.29) வரை வாக்களிக்கலாம் என கூறப்பட்டிருந்தது.

    இந்நிலையில் வரும் சனிக்கிழமை (அக்.3) பகல் 1 மணி வரை நேரடியாக வாக்களிக்கலாம் என்றும், இணையம், முகநூல்களில் கருத்துக்கூறுவோர் ஞாயிற்றுக்கிழமை (அக்.4) மாலை 5 மணி வரை கருத்துக்கூறலாம் என்றும் மாநகராட்சி மக்கள் தொடர்பு அலுவலர் சித்திரைவேல் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai