Enable Javscript for better performance
மதுரையில் 2 ஆவது நாளாக பலத்த மழை- Dinamani

சுடச்சுட

    

    மதுரை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை மாலையிலும் 2 வது நாளாக பலத்த மழை பெய்தது.

     மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக அவ்வப்போது மழை பெய்தாலும், கடந்த 2 நாள்களாக இடிமின்னல், காற்றுடன் பலத்த மழை பெய்துவருகிறது.

    சனிக்கிழமை மாலை முதல் ஞாயிற்றுக்கிழமை காலை வரை மதுரை நகரில் 82 மில்லி மீட்டர் மழை பதிவாகியிருந்தது. இந்நிலையில் திங்கள்கிழமை மாலையிலும் மழை பெய்தது.

     திங்கள்கிழமை மாலை முதல் செவ்வாய்க்கிழமை காலை வரை மதுரை மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் (மில்லிமீட்டரில்): விரகனூர் 57, மதுரை 2, கள்ளந்திரி 8, சிட்டம்பட்டி 33.7, மேலூர் 4.2, தனியாமங்கலம் 27, இடையபட்டி 9.8 என மழை பதிவாகியுள்ளன.

     செவ்வாய்க்கிழமை பகலில் வெயில் கொளுத்திய நிலையில், மாலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு மழையும் பெய்தது. சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக மதுரை மாநகர் மற்றும் ஊரகப் பகுதிகளில் பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மழையின் போது இடிமின்னல் மற்றும் காற்றும் வீசியது.

     மதுரை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என பொதுப்பணித்துறையினர் கூறினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai