Enable Javscript for better performance
மதுரை கோட்டத்திற்குள்பட்ட ரயில் எண், நேரம் மாற்றம்- Dinamani

சுடச்சுட

    

    மதுரை கோட்டத்திற்குள்பட்ட ரயில் எண், நேரம் மாற்றம்

    By மதுரை  |   Published on : 30th September 2015 07:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுரை கோட்டத்திற்குள்பட்ட ரயில்களின் எண் மற்றும் பயண நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    இந்த மாற்றங்கள் அனைத்தும் அக்.1 முதல் அமல்படுத்தப்படும் என்று ரயில்வே நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ரயில்வே நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

    ரயில் வருகை மற்றும் புறப்படும் நேரத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்கள்:  பழனி-மதுரை பயணிகள் ரயில் (56709) பழனியில் இருந்து மாலை 4.45 மணிக்கு புறப்பட்டு இரவு 8.10 மணிக்கு மதுரை வந்து சேரும்.

    மதுரை-பழனி பயணிகள் ரயில் (56710) மதுரையில் இருந்து காலை 7.45 மணிக்கு புறப்பட்டு பழனிக்கு 10.40 மணிக்கு வந்து சேரும்.

     மதுரை - ராமேசுவரம் பயணிகள் ரயில் (56723) மதுரையில் இருந்து காலை 6.50 மணிக்கு புறப்படும்.

     பழனி-திருச்செந்தூர் பயணிகள் ரயில் (56769) பழனியில் இருந்து காலை 7.35 மணிக்கு புறப்படும்.

     திருநெல்வேலி-செங்கோட்டை பயணிகள் ரயில் (56797) திருநெல்வேலியில் இருந்து காலை 9.25 மணிக்கு புறப்பட்டு 11.55 மணிக்கு செங்கோட்டை வந்து சேரும்.

     திருநெல்வேலி-தூத்துக்குடி பயணிகள் ரயில் (56742) (பழைய எண்-56828) தூத்துக்குடிக்கு காலை 9.25 மணிக்கு வந்து சேரும்.

     திருச்செந்தூர்-தூத்துக்குடி பயணிகள் ரயில் (56768) தூத்துக்குடிக்கு மாலை 6.35 மணிக்கு வந்து சேரும்.

     திருச்செந்தூர்-பழனி பயணிகள் ரயில் (56770) பழனிக்கு இரவு 7.20 மணிக்கு வந்து சேரும்.

     புனலூர்-கொல்லம் பயணிகள் ரயில் (56335) புனலூரில் இருந்து பகல் 2.10 மணிக்கு புறப்பட்டு 3.40 மணிக்கு கொல்லம் வந்து சேரும்.

     குருவாயூர்-புனலூர் பயணிகள் ரயில் (56365) பகல் 12.50 மணிக்கு கொல்லம் வந்து சேரும். 1.25 மணிக்கு கொல்லத்தில் இருந்து புறப்படும்.

    புதிய நிறுத்தங்கள்: சென்னை சென்ட்ரல்-மதுரை செல்லும் துரந்தோ வாரம் இருமுறை விரைவு ரயில் (22205) சேலம் ரயில் நிலையத்தில் ஜனவரி 4 ஆம் தேதி முதல் நிற்கும். இந்த ரயில் சென்னையில் இருந்து இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு சேலத்திற்கு 2.55 மணிக்கு வந்து சேரும். சேலத்தில் இருந்து அதிகாலை 3.05 மணிக்கு புறப்பட்டு 7.10 மணிக்கு மதுரை வந்து சேரும்.

     மதுரை-சென்னை சென்ட்ரல் செல்லும் துரந்தோ விரைவு ரயில் (22206)  ஜனவரி 5 ஆம் தேதி முதல் சேலத்தில் நிற்கும். இது மதுரையில் இருந்து இரவு 10.45 மணிக்கு புறப்பட்டு, 2.20 மணிக்கு சேலம் வந்து சேரும். சேலத்தில் இருந்து 2.30 மணிக்கு புறப்பட்டு காலை 7.20 மணிக்கு சென்னை வந்து சேரும்.

    சென்னையில் இருந்து புறப்படும் ரயில்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்கள்: மதுரை-சென்னை சென்ட்ரல் செல்லும் துரந்தோ விரைவு ரயில் (22206) காலை 7.20 மணிக்கு சென்னை வந்து சேரும்.

    சென்னை சென்ட்ரல்-நாகர்கோவில் விரைவு ரயில் (12689) மாலை 6.20 மணிக்கு சென்னையில் இருந்து புறப்படும்.

    சென்னை சென்ட்ரல்-பழனி விரைவு ரயில் (22651) இரவு 9.40 மணிக்கு சென்னையில் இருந்து புறப்படும்.

     ராமேசுவரம்-மண்டுவாடி விரைவு ரயில் (15119) பகல் 12.40 மணிக்கு சென்னை வந்து சேரும். சென்னையில் இருந்து 1.00 மணிக்கு புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai