Enable Javscript for better performance
மீனாட்சிசுந்தரேசுவரர் கோயில் உண்டியல் ரூ.54.60 லட்சம் வருவாய்- Dinamani

சுடச்சுட

    

    மீனாட்சிசுந்தரேசுவரர் கோயில் உண்டியல் ரூ.54.60 லட்சம் வருவாய்

    By மதுரை  |   Published on : 30th September 2015 07:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுரை அருள்மிகு மீனாட்சிசுந்தரேசுவரர் திருக்கோயில் உண்டியலில் பக்தர்கள் செப்டம்பர் மாதத்தில் ரூ.54.60 லட்சம் காணிக்கையாகச் செலுத்தியுள்ளனர்.

    திருக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் காணிக்கையாக பணமாக மட்டுமின்றி தங்கத் தாலி, தோடுகள், வளையல்கள் மற்றும் வெளிநாட்டு டாலர்களையும் உண்டியல்களில் செலுத்துகின்றனர்.  செப்டம்பர் மாத உண்டியல்கள் திருக்கோயில் வளாகத்தில் உள்ள பழைய திருக்கல்யாண மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை எண்ணப்பட்டன. அதில் ரொக்கமாக ரூ.54 லட்சத்து 60,259 இருந்தது. அமெரிக்கா, மலேசியா, ஜெர்மன், சிங்கப்பூர், இலங்கை என வெளிநாட்டு டாலர்கள் 450 இருந்தன.  உண்டியல்களில் 487 கிராம் தங்கம், 545 கிராம் வெள்ளிப் பொருள்களும் இருந்தன. உண்டியல்கள் எண்ணும் பணியில் திருக்கோயில் ஊழியர்கள், வங்கிப் பணியாளர்கள், பக்தர்கள் ஈடுபட்டனர். 

    திருப்பரங்குன்றத்தில் ரூ.10.93 லட்சம் வருமானம்:  திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் உண்டியலில் ரூ.10 லட்சத்து 93 ஆயிரத்து 47 ரூபாய் வருமானமாகக் கிடைத்தது.

    திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் உண்டியல்கள் செவ்வாய்க்கிழமை திறந்து எண்ணப்பட்டன. அதில் ரொக்கமாக ரூ.10 லட்சத்து 93 ஆயிரத்து 47 ரூபாய், தங்கம் - 150 கிராம், வெள்ளி 1 கிலோ 274 கிராம் வருமானமாக கிடைத்தது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai