Enable Javscript for better performance
முகாம்களில் வசிக்காத இலங்கைத் தமிழர்களுக்கும் இலவச காப்பீட்டு திட்டம்- Dinamani

சுடச்சுட

    

    முகாம்களில் வசிக்காத இலங்கைத் தமிழர்களுக்கும் இலவச காப்பீட்டு திட்டம்

    By மதுரை  |   Published on : 30th September 2015 07:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அகதிகள் முகாம்களில் வசிக்காத இலங்கை தமிழர்களும், முதல்வர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்கப்படுகின்றனர் என்று மாவட்ட ஆட்சியர் எல்.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

     இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி:  முகாம்களில் வசிக்காத அகதிகள் என்ற வகையில் காவல் நிலையங்களில் பதிவு செய்து வசித்து வரும் அனைத்து இலங்கை தமிழர்களுக்கும், முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இத் திட்டத்தில் சேர விரும்பும் இலங்கை தமிழர்களுக்கு வருமான வரம்பு நிர்ணயிக்கப்படவில்லை.  காப்பீட்டுத் திட்டத்தில் சேர விரும்பும் இலங்கை தமிழர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அலுவலகத்தை அணுகி புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம். அவ்வாறு வரும்போது தங்களது அடையாளச் சான்று நகல் கொண்டு வருவது அவசியம் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai