Enable Javscript for better performance
முதியோர் உதவித்தொகை  நிறுத்தம்: ஆட்சியரிடம் புகார்- Dinamani

சுடச்சுட

    

    முதியோர் உதவித்தொகை  நிறுத்தம்: ஆட்சியரிடம் புகார்

    By மதுரை  |   Published on : 30th September 2015 07:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுரை மாநகரப் பகுதியைச் சேர்ந்த பயனாளிகள் பலருக்கும்,  முதியோர், விதவையர் உதவித் தொகை நிறுத்தப்பட்டுள்ளதாக ஆட்சியரிடம் பெண்கள் மனு அளித்தனர்.

     அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில், மதுரை மாநகராட்சி மாமன்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் மா.செல்லம் தலைமையில் ஆட்சியர் அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்த பெண்கள், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) என்.ஆறுமுகநயினாரிடம் மனு அளித்தனர்.

     பின்னர் அவர்கள் கூறியது:

     மதுரை மாநகரப் பகுதியில் முதியோர், விதவையர், மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை பெற்று வந்த பலருக்கும் கடந்த சில மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் தொடர்பு கொண்டபோது, விரைவில் கிடைக்கும் எனத் தெரிவித்துள்ளனர்.

     ஆனால், சில பயனாளிகளுக்கு ஓராண்டு ஆகியும் நிறுத்தப்பட்ட தொகை மீண்டும் வழங்கப்படவில்லை.

     உதவித்தொகை பெற தகுதியானவர்களாக இருந்தும், எவ்வித விசாரணையும் இல்லாமல் உதவித்தொகையை நிறுத்தி வைத்துள்ளனர். இதுகுறித்து நடவடிக்கை கோரி மனு அளித்துள்ளோம். மனு மீது உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்துள்ளனர். இரு வாரங்களில் எங்களது மனுவுக்குப் பதில் இல்லையெனில், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுப்போம் என்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai