Enable Javscript for better performance
யானை வளர்க்க தடை கோரும் மனு: அரசு பதிலளிக்க உத்தரவு- Dinamani

சுடச்சுட

    

    யானை வளர்க்க தடை கோரும் மனு: அரசு பதிலளிக்க உத்தரவு

    By மதுரை  |   Published on : 30th September 2015 07:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோயில்கள் மற்றும் வீடுகளில் யானை வளர்க்கத் தடை கோரும் மனுவுக்கு அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை செவ்வாய்கிழமை உத்தரவிட்டது.

      மதுரை வில்லாபுரத்தைச் சேர்ந்த எம்.சரவணன் தாக்கல் செய்த மனு:  யானைகள் இயற்கை சூழலில் வனத்தில் இருக்கும் போது அதிக நாள்கள் வாழ்கின்றன. வீடுகள், கோயில்கள், மிருகக்காட்சி சாலைகளில் யானைகளை கட்டி வைப்பதால் குறுகிய காலத்தில் இறந்துவிடுகின்றன. இதனால் யானைகளின் எண்ணிக்கை 50 சதவீதம் குறைந்துள்ளது. இந்தியாவில் யானைகளை வணிக ரீதியாக பயன்படுத்துவது காலம் காலமாக நடந்து வருகிறது. இதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை. பயிற்சி என்ற பெயரில் யானைகள் துன்புறுத்தப்படுகின்றன.

    கோயில் திருவிழாக்களில் யானைகளின் முதுகில் அதிகபாரம் ஏற்றுவது, பல மணி நேரம் வெயிலில் நிறுத்தி வைப்பது, உணவு கொடுக்காமல் விடுவது என தொந்தரவுகள் தொடர்கின்றன. யானைகளை பாதுகாக்க வேண்டியது அவசியம்.

    எனவே தமிழகத்தில் கோயில்கள், வீடுகளில் யானைகள் வளர்க்க தடை விதித்து, அவற்றை முதுமலை அல்லது மறுவாழ்வு மையங்களுக்கு அனுப்பவும் உத்தரவிட வேண்டும் எனக் குறிபிட்டுள்ளார்.

    இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுதாகர், வி.எம்.வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. இம்மனுவுக்கு அக். 6 ஆம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய தமிழக உள்துறை செயலர், வனத்துறை முதன்மை செயலர், அறநிலையத்துறை செயலர் மற்றும் டிஜிபி ஆகியோருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai