Enable Javscript for better performance
வங்கிகளுக்கான வட்டிவிகிதம் குறைப்பு: தொழில் வர்த்தக சங்கம் வரவேற்பு - Dinamani

சுடச்சுட

    

    வங்கிகளுக்கான வட்டிவிகிதம் குறைப்பு: தொழில் வர்த்தக சங்கம் வரவேற்பு

    By மதுரை  |   Published on : 30th September 2015 07:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைத்துள்ளதற்கு தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.

     இதுகுறித்து சங்கத்தின் முதுநிலைத் தலைவர் எஸ்.ரத்தினவேல், தலைவர் என்.ஜெகதீசன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை:

     ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டில் உள்ள வங்கிகளுக்கு, தான் வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தை (ரெப்போ ரேட்), 0.5 சதவீதம் குறைத்துள்ளது வரவேற்புக்குரியது. இந்த வட்டி குறைப்பு நடவடிக்கையால் வங்கிகள் அளிக்கும் வீட்டுக் கடன், வாகனக் கடன் ஆகியவற்றுக்கான வட்டி விகிதங்களும் குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

     கடந்த 4 ஆண்டுகளில் மிகக் குறைவான இந்த வட்டி விகிதம் காரணமாக தொழில், ரியல் எஸ்டேட் துறைகளில் முதலீடு அதிகரித்து நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி உத்வேகம் பெறக்கூடும்.

      பிறநாடுகளைக் காட்டிலும் இந்தியாவில் வங்கிக் கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகமாக இருப்பது பன்னாட்டுச் சந்தைகளில் நமது உற்பத்திப் பொருள்கள் போட்டியிட இயலாமைக்கு முக்கியக் காரணமாக இருக்கிறது. இந்நிலையில், ரிசர்வ் வங்கியின் 0.5 சதவீதம் வங்கிக் கடன் வட்டி குறைப்பு, தொழில் வணிகத் துறைக்கு பெரும் உதவியாக இருக்கும்.

     நிகழாண்டு மத்திய பட்ஜெட்டில் நாட்டின் நிதிநிலையைப் பலப்படுத்தவும், 2016 ஜனவரிக்குள் பணவீக்கத்தை 6 சதவீதத்திற்கு குறைவாகக் கொண்டு வரவும் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என மத்திய நிதி அமைச்சர் கூறியிருக்கிறார்.

    இதற்கு மத்திய அரசின் பல்வேறு தொலைநோக்குத் திட்டங்களின் தொழில் திறனையும், உற்பத்தியையும் ஏற்றுமதியையும் கணிசமாக உயர்த்த வட்டி குறைப்பு உதவிகரமாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai