Enable Javscript for better performance
விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்திற்கு தடை- Dinamani

சுடச்சுட

    

    விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்திற்கு தடை

    By திருப்பரங்குன்றம்  |   Published on : 30th September 2015 07:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மீது வழக்குப்பதிவு செய்ததை கண்டித்து அக்கட்சியினர் நடத்த இருந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீஸார் தடை விதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

     திருப்பரங்குன்றம் ஓம்சக்தி நகரில் விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் செப்.14 ஆம் தேதி படிப்பகம் ஒன்றை திறந்து வைத்தார். இதற்கு போலீஸார் அனுமதியளிக்கவில்லை. இதையடுத்து அனுமதியின்றி படிப்பகம் திறந்ததால் திருமாவளவன் உள்ளிட்ட 20 மீது திருநகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இதனைக் கண்டித்து திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மேற்கு மாவட்டச் செயலர் ரா.அய்யங்காளை தலைமையில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் செய்ய காவல்துறையினரிடம் அனுமதி கேட்டனராம். இதற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்துவிட்டனர்.

    இந்நிலையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்யப்போவதாக அக்கட்சியினர் 16 மண்டபம் பகுதியில் குவிந்தனர். இதனால் அப்பகுதியில் போலீஸாரும் அதிகளவில் குவிக்கப்பட்டனர். இதையடுத்து அக்கட்சியின் மாவட்ட செயலர் ரா.அய்யங்காளை ஆர்ப்பாட்டம் முறையாக நீதிமன்றத்தில் அனுமதி பெறப்பட்டு நடத்தப்படும் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai