Enable Javscript for better performance
வீடுகளில் புகுந்து நகை திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    மதுரையில் வீடுகளில் மர்மநபர்கள் புகுந்து 14 பவுன் நகைகளைத் திருடிச்சென்றுள்ளனர்.

     மதுரை கூடல்புதூர் வள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் சரவணபாபு (28). ஜவுளிக்கடையில் பணிபுரிகிறார். இவர் குடும்பத்துடன் கடந்த வாரம் சென்னை சென்றார். இந்நிலையில் வீட்டின் கதவுப் பூட்டை உடைத்த மர்மநபர்கள் உள்ளேயிருந்த 10 பவுன் தங்கநகைகள், ரூ.10 ஆயிரம் ரொக்கத்தை திருடிச்சென்றுள்ளனர்.

     சென்னையிலிருந்து திங்கள்கிழமை வீடு திரும்பிய சரவணபாபு திருட்டு குறித்து கூடல்புதூர் குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளித்துள்ளார்.

      சிலைமான்: மதுரை விரகனூர் பகுதியில் உள்ளது எல்.கே.டி.நகர். இங்கு வசிப்பவர் பாண்டீஸ்வரன் (45). இவர் கடந்த சனிக்கிழமை குடும்பத்துடன் மணப்பாறைக்குச் சென்றுவிட்டார். இந்நிலையில் வீட்டின் கதவுப் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள் வீட்டின் பீரோவிலிருந்த நாலரைப் பவுன் நகைகள், ஆயிரம் ரூபாய் ரொக்கத்தை திருடிச்சென்றுள்ளனர். சிலைமான் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai