Enable Javscript for better performance
அனைத்து கிராமங்களுக்கும் தாமிரவருணி குடிநீர் - Dinamani

சுடச்சுட

    

    தமிழ்நாடு என்று பெயர் சூட்ட வலியுறுத்தி 78 நாட்கள் உண்ணாவிரம் இருந்து உயிர் நீத்த தியாகி சங்கரலிங்க நாடாருக்கு தமிழக அரசு விருதுநகரில் மணிமண்டபம் கட்டியுள்ளது.

    வத்திராயிருப்பில் அரசு போக்குவரத்துக் கழகப் பணிமனை,  தேவையான இடத்தில் பொது விநியோகக் கடைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.

    இரு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 30 படுக்கைகளுடன் கூடிய தரம் உயர்த்தப்பட்டுள்ளன.

    ஸ்ரீவில்லிபுத்தூர்- சென்னைக்கு நேரடியாக அரசுப் பேருந்து விடப்பட்டுள்ளது. பல்வேறு கிராமச் சாலைகள் போடப்பட்டு, மேலத்தொட்டியபட்டியில் புதிய பாலம் அமைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து முத்துலிங்காபுரம், கீழப்பொட்டல்பட்டி, கே.புதூர் ஆகிய புதிய வழித்தடங்களில் அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன.

    தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தை ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் வத்திராயிருப்பு ஊராட்சிகள் மற்றும் 5 பேரூராட்சிகளுக்கு விரிவுபடுத்தி, இன்று அனைத்து கிராம மக்களுக்கும் தாமிரவருணி குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    76 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் கூட்டுறவு நூற்பு ஆலை ரூ.40 கோடி கடன் ஏற்பட்டு 2003- ஆம் ஆண்டு மூடப்பட்டது. கூட்டுறவு நூற்பாலை இடத்தில் அரசு ஆயுத்தஆடைகள் தொழிற்சாலை அமைத்தால், 2 ஆயிரத்திற்கும்  மேற்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். நகராட்சி தீர்மானம் நிறைவேற்றிக் கொடுக்காததால் பேருந்து நிலைய இடமாற்றம் நிலுவையில் உள்ளது. அழகாபுரி விலக்கு அருகே கையகப்படுத்தப்பட்டுள்ள 229 ஏக்கர் நிலத்தில் அரசு கலைக் கல்லூரி அமைக்கும் என நம்புகிறேன் என்றார் சட்டப்பேரவை உறுப்பினரான வெ. பொன்னுப்பாண்டியன்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai