Enable Javscript for better performance
அரசாணைகளை இணையத்தில் பதிவேற்ற துறைத் தலைவர்களை அறிவுறுத்த வேண்டும்: தலைமைச் செயலருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு- Dinamani

சுடச்சுட

    

    அரசாணைகளை இணையத்தில் பதிவேற்ற துறைத் தலைவர்களை அறிவுறுத்த வேண்டும்: தலைமைச் செயலருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

    By மதுரை  |   Published on : 15th April 2016 07:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழக அரசின் அரசாணைகளை இணையத்தில் பதிவேற்ற துறைத் தலைவர்களுக்கு தலைமைச் செயலர் அறிவுறுத்த வேண்டும் என்று, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

       தமிழக அரசின் அரசாணைகள், அறிவிப்பாணைகள், சுற்றறிக்கைகள் உள்ளிட்டவற்றை தமிழக அரசின் இணையதளத்தில் வெளியிடக் கோரி, மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

      இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ். மணிக்குமார், சி.டி. செல்வம் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு: தமிழக அரசின் இணையதளத்தை ஆய்வு செய்தபோது, அதில் அரசாணைகள், உத்தரவுகள்

    பதிவேற்றப்படுவது தெரியவந்தது. தற்போது, தகவல் அறியும் உரிமைச் சட்டம் அமலில் உள்ளது. இந்தச் சட்டத்தின் கீழ் யாரும் எந்தத் தகவலையும் பெறமுடியும். தமிழக அரசு சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

      இந்தத் திட்டங்கள் தொடர்பான அறிவிப்புகள், உத்தரவுகளை இணையத்தில் பதிவேற்றும்போது, அதை பொதுமக்கள் எளிதில் தெரிந்துகொள்வதற்கு வாய்ப்பு ஏற்படும்.

      ஏற்கெனவே, அச்சகத் துறை சார்பில் அரசாணைகள், அரசிதழ்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. எனவே, அரசின் உத்தரவுகளை முடிந்தவரை இணையத்தில் பதிவேற்ற அனைத்து துறைத் தலைவர்களுக்கும், மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமைச் செயலர் அறிவுறுத்த வேண்டும். மேலும், அரசாணைகளை பதிவேற்றம் செய்வது தொடர்பாக தகவல் தொழில்நுட்பத் துறை சார்பில் 2014-இல் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

      இணையதளத்தில் அரசாணைகளை பதிவேற்றுவதில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்திருப்பதால், அந்த நடவடிக்கையை தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என்பதை தவிர, வேறு எந்த உத்தரவையும் இந்த வழக்கில் பிறப்பிக்க முடியாது எனக் கூறி மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai