Enable Javscript for better performance
சிறந்த நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்களுக்கு விருது- Dinamani

சுடச்சுட

    

    சிறந்த நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்களுக்கு விருது

    By மதுரை  |   Published on : 15th April 2016 07:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு உள்பட்ட கல்லூரிகளின் சிறந்த நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.

    விழாவுக்கு பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் எம். நல்லகாமன் வரவேற்றார். கன்வீனர் குழு உறுப்பினர்கள் வி. வெங்கட்ராமன், எம். ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாட்டு நலப்பணித் திட்ட மண்டல இயக்குநர் சி. சாமுவேல் செல்லய்யா சிறப்புரையாற்றி, விருது பெற்றவர்களுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்தார்.

      சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் வி. ஜெயக்குமார், ராஜபாளையம் ராஜூஸ் கல்லூரி திட்ட அலுவலர் ஆர். ஜெகநாத், கருமாத்தூர் அருள் ஆனந்தர் கல்லூரி திட்ட அலுவலர் ஏ. துரைசிங்கம் உள்ளிட்டோர் முதல் 3 விருதுகளைப் பெற்றனர்.

      டோக் பெருமாட்டி கல்லூரி திட்ட அலுவலர் டி. தேவ பிரசன்னா, அருப்புக்கோட்டை சைவ பானு சத்ரியா கல்லூரி திட்ட அலுவலர் எஸ். சண்முக பிரியா உள்ளிட்டோர் ஆறுதல் பரிசு பெற்றனர்.

      மதுரைக் கல்லூரியைச் சேர்ந்த பி. காசிமாயன், சேர்மத்தாய் வாசன் கல்லூரியைச் சேர்ந்த எஸ்.எம். ராஜலட்சுமி, அருள் ஆனந்தர் கல்லூரியைச் சேர்ந்த எஸ். கார்த்திகா, கே.எம். கார்த்தி, அருள்மிகு கலசலிங்கம் கல்லூரியைச் சேர்ந்த எம். தங்கமாரிமுத்து, அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரியைச் சேர்ந்த எல். மரிய அந்தோணி கிறிஸ்டி உள்ளிட்டோருக்கு சிறந்த தன்னார்வலர்களுக்கான விருது வழங்கப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai