Enable Javscript for better performance
தந்தையின் வழியில் பணிகளைத் தொடருவேன்: பிடிஆர் பழனிவேல்ராஜன் மகன் பி. தியாகராஜன் உறுதி- Dinamani

சுடச்சுட

    

    தந்தையின் வழியில் பணிகளைத் தொடருவேன்: பிடிஆர் பழனிவேல்ராஜன் மகன் பி. தியாகராஜன் உறுதி

    By dn  |   Published on : 15th April 2016 08:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    எனது தந்தையின் வழியில் மதுரையின் வளர்ச்சிக்கான பணிகளைத் தொடருவேன் என்று தமிழக சட்டப்பேரவை முன்னாள் தலைவர் பி.டி.ஆர்.பழனிவேல்ராஜனின் மகனும், மதுரை மத்திய தொகுதி திமுக வேட்பாளருமான பி.தியாகராஜன்  கூறினார்.

    உலகின் பல்வேறு முன்னணி நிறுவனங்களில் பணியாற்றியவர். தொழில் மற்றும் வர்த்தகம், கல்வித் துறையில் ஆழ்ந்த அனுபவம் உள்ளவர். திமுக குடும்பத்தைச் சார்ந்தவராக இருந்தாலும், அரசியலில் இருந்து ஒதுங்கியே இருந்தவர் என பி.டி.ஆர்.பழனிவேல்ராஜனின் மகனும், மதுரை மத்திய தொகுதி திமுக வேட்பாளருமான பி.தியாகராஜனைக் கூறலாம். 2011 பேரவைத் தேர்தல், 2014 மக்களவைத் தேர்தல் ஆகியவற்றில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலில் இவரது பெயர் அடிபட்டது.

    வரும் பேரவைத் தேர்தலுக்காக திமுக தலைமை நடத்திய வேட்பாளர்களைத் தேர்வு செய்வதற்கான நேர்காணலுக்கு திமுக தலைவர் கருணாநிதியால் நேரடியாக அழைக்கப்பட்டவர்.

    தற்போது மத்திய தொகுதி வேட்பாளராக அவர் அறிவிக்கப்பட்டிருக்கிறார். சென்னையில் இருந்து வியாழக்கிழமை வந்த அவருக்கு கட்சி நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர்.

    பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:  மதுரையின் வளர்ச்சிக்காக எனது தந்தை பல திட்டங்களைக் கொண்டு வந்தது மக்களுக்கு நன்கு தெரியும். அவரது வழியில் எனது பணியும் தொடரும். பல நாடுகளில் பணியாற்றியிருக்கிறேன். அரசியலில் இறங்க இது சரியான தருணம் எனக் கருதுகிறேன். எனது எண்ணத்துக்கு ஏற்ப திமுகவில் வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது.

    கல்வி, தொழில், வேலைவாய்ப்பு, அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய பாடுபடுவேன்.

     ஏப்.25 ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளேன். அதைத் தொடர்ந்து தினமும் காலை மற்றும் மாலையில் வீடு வீடாகச் சென்று பிரசாரம் செய்ய உள்ளேன் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai