Enable Javscript for better performance
தமிழ்ப் புத்தாண்டு: கோயில்களில் பக்தர்கள் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    தமிழ்ப் புத்தாண்டு: கோயில்களில் பக்தர்கள் கூட்டம்

    By மதுரை  |   Published on : 15th April 2016 07:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழ்ப் புத்தாண்டான துர்முகி பிறந்ததை முன்னிட்டு வியாழக்கிழமை மதுரை திருக்கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    தமிழ்ப்புத்தாண்டு தினத்தை முன்னிட்டு மதுரை ஊரகப்பகுதிகளில் விவசாயிகள் ஏர் பூட்டி நிலத்தில் உழுது பூஜை செய்தனர். பொதும்பு உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் ஒன்று சேர்ந்து காளைகளில்

    ஏர்பூட்டி வயலுக்குச் சென்று சிறப்புப் பூஜைகள் செய்து கொண்டாடினர்.

    மதுரை நகரில் அருள்மிகு மீனாட்சிசுந்தரேசுவரர் திருக்கோயிலில் அம்மன், சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் காலையில் நடைபெற்றது. ஆடி வீதிகளில் வரிசை நிற்கும் அளவுக்கு கூட்டம் காணப்பட்டது.

      மதுரை மேலமாசி வீதியிலுள்ள ஐயப்பன் கோயில், நேரு ஆலால சுந்தர விநாயகர் கோயில், கூடலழகர் பெருமாள் கோயில், தல்லாகுளம் பெருமாள் கோயில், இம்மையிலும் நன்மை தருவார் கோயில்,

    செல்லூர் திருவாப்புடையார், தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயில் ஆகி உள்ளிட்ட அனைத்துக் கோயில்களிலும் குடும்பம் குடும்பமாக பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தனர்.

     பஞ்சாங்கம் வாசித்தல்: மதுரை அருள்மிகு மீனாட்சிசுந்தரேசுவரர் திருக்கோயிலில் சுவாமி சன்னதி முன்பு தமிழ்ப் புத்தாண்டு பஞ்சாங்கம் வாசித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. திருக்கோயில் பஞ்சாங்கத்தை

    வைத்து சிவாச்சாரியார்கள் சிறப்புப் பூஜை செய்தனர். பின்னர் திருக்கோயில் நிர்வாகிகள் முன்பு நாட்டு வளத்தை குறிப்பிடும் வகையில் பஞ்சாங்கப் பலன்களை வாசித்தனர். இதேபோன்று பிற கோயில்களிலும் பஞ்சாங்கம் வாசித்தல் நடைபெற்றது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai