Enable Javscript for better performance
திருப்பரங்குன்றத்தில் அதிமுக வேட்பாளர்கள் சுவாமி தரிசனம்- Dinamani

சுடச்சுட

    

    திருப்பரங்குன்றத்தில் அதிமுக வேட்பாளர்கள் சுவாமி தரிசனம்

    By திருப்பரங்குன்றம்  |   Published on : 15th April 2016 07:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழ்ப் புத்தாண்டையொட்டி திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் அதிமுக வேட்பாளர்கள் வியாழக்கிழமை சுவாமி தரிசனம் செய்தனர்.

      திருப்பரங்குன்றம் கோயிலில் தமிழ்புத்தாண்டையொட்டி மூலவருக்கு தங்க கவசம் அணிவித்து சிறப்பு பூஜை செய்வது வழக்கம். வியாழக்கிழமை நடைபெற்ற சிறப்பு பூஜையில் அதிமுக புறநகர்

    மாவட்ட செயலர் வி.வி.ராஜன்செல்லப்பா தலைமையில் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார், திருப்பரங்குன்றம் வேட்பாளர் எஸ்.எம்.சீனிவேல், சோழவந்தான் வேட்பாளர் மாணிக்கம், கிழக்கு வேட்பாளர்

    தக்கார்பாண்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டு அதிமுக 234 தொகுதிகளிலும் வெற்றிபெற்று ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டும் என சிறப்பு வழிபாடு செய்தனர்.

      இதில் வழக்குரைஞர் பிரிவு இணைசெயலர் எம்.ரமேஷ், ஒன்றிய துணைசெயலர் நிலையூர் முருகன், பொதுக்குழு உறுப்பினர் முத்துக்குமார், பாசறை மாவட்டச் செயலர் செல்வம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai