Enable Javscript for better performance
பாஜக வேட்பாளர்கள் சுயவிவரம்- Dinamani

சுடச்சுட

    

    மதுரை மேற்கு

    பெயர் : ஏ.சசிகுமார் (43).

    ஊர் : பழங்காநத்தம்.

    கல்வி : பத்தாம் வகுப்பு.

    பெற்றோர் : அக்கினிச்சாமித் தேவர், வசந்தா.

    தொழில் : முழுநேர அரசியல்வாதி.

    சாதி :  தேவர்.

    குடும்பம் : மனைவி கீர்த்திகா, 2 மகள்கள்.

    கட்சிப்பொறுப்பு : கடந்த 1993-ல் ஜனதா கட்சியில் மாவட்ட இளைஞரணித் தலைவர். பின் மாவட்டச் செயலர், 2001-ல் மாவட்டத்தலைவர், 2013 ல் ஜனதா தலைவர் சுப்பிரமணியன்சுவாமி

    தலைமையில் பாஜகவில் இணைந்தது.

    தேர்தல் அனுபவம்: கடந்த 1996 ஆம் ஆண்டு மதுரை மத்திய தொகுதியில் போட்டியிட்ட ஜனதா கட்சி மாநிலத்தலைவர் சந்திரலேகாவிற்கு தேர்தல் பணிக்குழு பொறுப்பாளராகச் செயல்பட்டார். 2001 -ல்

    திருப்பரங்குன்றம் சட்டப்பேரவைத் தொகுதியில் ஜனதா கட்சி உறுப்பினராகப் போட்டியிட்டு தோல்வி (மூன்றாமிடம்). 2001 ல் மதுரை மத்திய தொகுதியில் பாஜக ஆதரவுடன் ஜனதா வேட்பாளராக ஏர்

    உழவன் சின்னத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். கடந்த 2011 ல் ஜனதாகட்சி வேட்பாளராக தாமரைச் சின்னத்தில் போட்டியிட்டு தோல்வி.

     

    மதுரை மையம்

    பெயர் : எம்.கார்த்திக்பிரபு (40).

    ஊர் :  அக்ரிணி வளாகம், ஆண்டாள்புரம், மதுரை.

    கல்வி : இளங்கலை மருந்தியல் பட்டதாரி

                            (பி.ஃபார்ம்).

    பெற்றோர் : முத்துலட்சுமணன்

                         (ஆயிரவைசிய சமூக மாநில

                          துணைத்தலைவர்), வசந்தகுமாரி.

    தொழில் : மருந்து உற்பத்தி நிறுவன உரிமையாளர்.

    சாதி : தெலுங்குச்செட்டியார்.

    குடும்பம் : மனைவி கே.காயத்ரி, மகன், மகள் உள்ளனர்.

    கட்சிப் பொறுப்பு: கடந்த 2010 பாஜக உறுப்பினர். பின் மதுரை மாவட்ட தொழில் பிரிவு தலைவர், மாவட்டச் செயலர், தற்போது மாவட்டப் பொதுச்செயலர்.

    தேர்தல் அனுபவம்: கடந்த 2011 -ல் மதுரை மாநகராட்சி எல்லீஸ் நகர் (17 வது வார்டு) மாமன்ற உறுப்பினருக்கு போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

     

     

    மேலூர்

    பெயர் : பூ.வெ.பூபதி கக்கன் (51)

    ஊர் :தும்பைப்பட்டி

    இருப்பு : சென்னை

    படிப்பு : பி.ஏ.

    தந்தை பெயர் : வெள்ளை கக்கன்  (கதர்மற்றும் கிராமத்தொழில்

       முன்னாள் உதவி இயக்குநர்)

    தாயார் :பார்வதி அம்மாள் (சமூகசேவகர்)

    குடும்பம் : மனைவி ராமபிரபா (ஆசிரியை) தனியார் பள்ளி

    மகள் : யோக ஸ்ரீ  

    கட்சி பொறுப்பு : பாஜக மாநில செயற்குழு உறுப்பினர்.

    குடும்பப் பின்னணி: தமிழக முன்னாள் அமைச்சர் தியாகி பூ.கக்கன் சகோதரர் மகன்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai