Enable Javscript for better performance
மதுரையில் நாளை சின்னத்திரை நட்சத்திரங்கள் பங்கேற்கும் நிகழ்ச்சி- Dinamani

சுடச்சுட

    

    மதுரையில் நாளை சின்னத்திரை நட்சத்திரங்கள் பங்கேற்கும் நிகழ்ச்சி

    By மதுரை  |   Published on : 15th April 2016 07:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுரையில் சின்னத்திரை நட்சத்திரங்கள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சி காந்தி நினைவு அருங்காட்சியக வளாகத்தில் சனிக்கிழமை (ஏப்.16) நடைபெறுகிறது.

    இதுகுறித்து மதுரை அட்வர்டைசிங் ஏஜென்சிஸ் அசோசியேசன் வெளியிட்டுள்ள செய்தி:  மதுரை அட்வர்டைசிங் ஏஜென்சிஸ் அசோசியேசன் சார்பில் மதுரையில் சனிக்கிழமை நடைபெறும் இந்நிகழ்ச்சியில் பாடல், நடனம், நகைச்சுவை நிகழ்ச்சி ஆகியன இடம் பெறுகின்றன. பாடகர்கள் திவாகர், அரவிந்த் ஸ்ரீனிவாஸ், நிரஞ்சனா, செளந்தர்யா, நந்தகுமார் பங்கேற்கின்றனர். சத்தியா, வி.ஜே.சித்ரா, சந்தியா ஆகியோரின் நடன நிகழ்ச்சி இடம்பெறுகிறது.

     சின்னத்திரை நகைச்சுவை பிரபலங்கள் வடிவேல் பாலாஜி, ஆர்.ஜெயச்சந்திரன், ராமர் மற்றும் பழனி பட்டாளம் ஆகியோரின் நகைச்சுவை நிகழ்ச்சிகள் இடம்பெறுகிறது.

     சென்னை வி கிரி வென்டசர் நிறுவனத்துடன் இணைந்து இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதற்கான இலவச நுழைவுச்சீட்டு காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் அமைக்கப்பட்டுள்ள நிகழ்ச்சிக்கான அலுவலகத்தில் கிடைக்கும்.

    தொடர்புக்கு 98429 10229, 99401 02406 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.  சங்கத் தலைவர் பி.ரமேஷ், செயலர் எஸ்.முருகன், பொருளாளர் கே.ராமதாஸ், ஒருங்கிணைப்பாளர் சண்முகம் உள்ளிட்டோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளனர் என சங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai