Enable Javscript for better performance
மீனாட்சிசுந்தரேசுவரர் திருக்கல்யாணம்: சேதுபதி பள்ளியில் கல்யாண விருந்து- Dinamani

சுடச்சுட

    

    மீனாட்சிசுந்தரேசுவரர் திருக்கல்யாணம்: சேதுபதி பள்ளியில் கல்யாண விருந்து

    By மதுரை  |   Published on : 15th April 2016 07:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுரை அருள்மிகு மீனாட்சிசுந்தரேசுவரர் திருக்கல்யாணத்தன்று சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் பழமுதிர்சோலை திருவருள் முருகன் பக்த சபை சார்பில் கல்யாண விருந்து

    நடைபெறுகிறது. விருந்து நடத்துவதற்கான அனுமதியை தேர்தல் அலுவலர்கள் அளித்துள்ளனர்.

     இதுகுறித்து பழமுதிர்ச்சோலை திருவருள் முருகன் பக்த சபை டிரஸ்ட் தலைவர் என்.விவேகானந்தன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: முருகன் பக்த சபை சார்பில் கடந்த 16 ஆண்டுகளாக சித்திரைத்

    திருவிழா மீனாட்சிசுந்தரேசுவரர் திருக்கல்யாண விருந்து நடைபெற்றுவருகிறது.

       வரும் 19 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலையில் திருக்கல்யாண விருந்து வடக்குவெளிவீதியில் உள்ள சேதுபதிமேல்நிலைப் பள்ளியில் நடைபெறுகிறது. கல்கண்டு சாதம், சர்க்கரைப் பொங்கல்,

    வெண்பொங்கல், வடை, சாம்பார் சாதம், தக்காளி சாதம், தயில்சாதம், உருளைக் கிழங்கு, கறி, பச்சடி, ஊறுகாய் ஆகியவற்றுடன் தண்ணீர் பாக்கெட்டுகளும் அளிக்கப்படும்.

          விருந்துக்குத் தேவையான காய்கறிகளை பரவை, மாட்டுத்தாவணி மார்க்கெட் வியாபாரிகள் அளிக்கின்றனர். அரிசியை சபை உறுப்பினர்கள், மீனாட்சியம்மன் கோயில் பக்த சபையினர்

    அளிக்கின்றனர். மளிகைப் பொருள்கள் கீழமாசி வீதி வியாபாரிகள் கொடுக்கின்றனர்.

     இலவச விருந்துக்கு மளிகைப் பொருள்கள் உள்ளிட்டவற்றை அளிக்க விரும்புவோர் வரும் 17 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி முதல் 18 ஆம் தேதி மாலை வரை சேதுபதி மேல்நிலைப்

    பள்ளியில் கொடுத்து ரசீதைப் பெற்றுக்கொள்ளலாம்.

             திங்கள்கிழமை (18 ஆம் தேதி) காலை சேதுபதி பள்ளியில் விருந்துக்கான காய்கறி நறுக்கும் பணிகள் நடைபெறும். இதில் சேவை செய்யவிரும்புவோர் பங்கேற்கலாம்.

     அன்று மாலை மாப்பிள்ளை அழைப்பு விருந்துக்கும் ஏற்பாடு செய்யப்படும் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai