Enable Javscript for better performance
யாருக்கு ஓட்டு?- Dinamani

சுடச்சுட

    

    வி.மாசிலாராணி (32)- குடும்பத் தலைவி: ஒரு தலைமுறையையே மதுவிற்கு பழக்கப்படுத்திவிட்ட கட்சிக்கு வாக்களிக்க மாட்டேன். தமிழக மக்கள் மீது அக்கறை கொண்டு, அவர்களின் வளர்ச்சியையே குறிக்கோளாகக் கொண்டு,  அனைத்து தரப்பினரின் உயர்வுக்காகவும், மகளிரின் முன்னேற்றத்திற்காகவும் உழைக்கும் அதிமுகவிற்கே வாக்களிப்பேன்.

    வி.செல்லத்துரை (66) - வியாபாரி: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் சிறப்பான திட்டங்களை தமிழகத்தில் தங்கு தடையின்றி நிறைவேற்றிய பாரதீய ஜனதா கட்சிக்கே வாக்களிப்பேன்.

    எஸ்.மூர்த்தி (36) - தனியார் நிறுவன ஊழியர்: குறைந்த ஊதியத்தில் வேலை செய்து கொண்டே, பல்வேறு தேர்வுகளுக்கு தயாராகும் எனக்கு, மதியம் அம்மா உணவகத்தில் குறைந்த விலையில் திருப்தியான உணவளிக்கும் முதல்வர் ஜெயலலிதாவின் அதிமுகவிற்கே வாக்களிப்பேன்.

    வேல்முருகன் (32)ஆட்டோ ஓட்டுநர்: சொல்லாத பல்வேறு மக்கள் நலத் திட்டங்களையும் அனைத்து தரப்பினரும் மனநிறைவு கொள்ளும் வகையில் செயல்படுத்தியுள்ள அதிமுக அரசு தொடர அக்கட்சிக்கே வாக்களிப்பேன்.

    மா.மாடசாமி (59). ஜவுளி வியாபாரி:  கடந்த அதிமுக ஆட்சியில் தமிழக மக்கள் எண்ணற்ற நன்மைகளைப் பெற்றுள்ளார்கள். தடையில்லா மின்சாரம், நில அபகரிப்பு, கட்டப் பஞ்சாயத்து இல்லாமல் மக்கள் நிம்மதியாக வாழ்க்கை நடத்த முடிந்தது. நல்லாட்சி தொடர அதிமுகவிற்கே வாக்களிப்பேன்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai