Enable Javscript for better performance
யாருக்கு ஓட்டு?- Dinamani

சுடச்சுட

    

    சி.மாரிச்செல்வம்(40) கணக்காளர்:   எந்த சட்டப்பேரவை உறுப்பினர்களும் மக்களுக்கு தேவையான திட்டங்களை நிறைவேற்றவில்லை. ஆகவே நோட்டாவுக்கே எனது வாக்கு.

    வி.கதிர்வேல்ராஜன் (43) கணிணி விற்பனையாளர்:

      தொடர்ந்து மூன்று முறை வெற்றி பெற்ற அதிமுகவினர் மக்களுக்குத் தேவையான திட்டங்களை நிறைவேற்றவில்லை. அதனால் நான் திமுகவுக்கே வாக்களிப்பேன்.

    என்.சொக்கலிங்கம் (25) பொறியாளர்:   திமுக தேர்தல் அறிக்கையில் பல நல்ல திட்டங்கள் கொண்டுவரப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் திமுகவுக்கே எனது வாக்கு.

    என்.மாரியப்பராஜா (40) தொழிலாளி:  திமுக,அதிமுகவுக்கு மாற்றாக மக்கள் நலக்கூட்டணிக்கே வாக்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.

    எம்.சொர்ணம் (65) குடும்பத் தலைவி:   இலவச மருத்துவ வசதி போன்ற நல்ல திட்டங்களை கொண்டுவந்த அதிமுகவுக்கே நான் வாக்களிக்க முடிவு செய்துள்ளேன்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai