Enable Javscript for better performance
திருவாதவூர் கோயிலில் தேரோட்டம்- Dinamani

சுடச்சுட

    

    மதுரை மாவட்டம் திருவாதவூரிலுள்ள திருமறைநாதர்-வேதநாயகி அம்மன் திருக்கோயில் வைகாசித் திருவிழா திருத்தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

    திருவாசகம் தந்தருளிய தெய்வீகப்புலவர் மாணிக்கவாசகர் பிறந்த திருத்தலம் திருவாதவூர். இங்குள்ள திருமறைநாதர்-வேதநாயகி அம்மன் திருக்கோயில் வைகாசித் திருவிழா கடந்த 12-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 19-ஆம் தேதி திருமறைநாதர்-பிரியாவிடை, வேதநாயகி அம்மன் திருக்கல்யாண வைபவம்  நடைபெற்றது.

    இதைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை காலை தேரோட்டம் நடைபெற்றது. காலை 6 மணிக்கு திருமறைநாதர் பிரியாவிடை சமேதரராக தேரில் எழுந்தருளினார். சிறப்பு பூஜைகளுக்குப் பின்னர் 9.30 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. திருக்கோயிலை வலம் வந்து, 10.30 மணியளவில் தேர் நிலைக்கு வந்தது. வேதநாயகி அம்மன் தனியாக சட்டத்தேரில் எழுந்தருளினார். இந்தத் தேரை பெண்கள் மட்டும் இழுத்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai