Enable Javscript for better performance
சட்டம் இயற்றினாலே ஜல்லிக்கட்டு நடக்கும்: ஜி.கே.வாசன்- Dinamani

சுடச்சுட

    

    சட்டம் இயற்றினாலே ஜல்லிக்கட்டு நடக்கும்: ஜி.கே.வாசன்

    By DIN  |   Published on : 28th November 2016 08:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சட்டம் இயற்றுவதன் மூலமே ஜல்லிக்கட்டை நடத்த முடியும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.
     மதுரையில் கட்சியினர் இல்ல விழாவில் ஞாயிற்றுக்கிழமை பங்கேற்க வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
     தமிழகத்தில் நடப்பாண்டிலாவது ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும். மத்திய பாஜக அரசு ஜல்லிக்கட்டு நடத்துவதை கொள்கையாக அறிவித்து, அவசரச் சட்டம் இயற்றிட வேண்டும். ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக அனைத்துக் கட்சிகளும் மக்களவையில் குரல் கொடுப்பது அவசியம். பாதுகாப்பான முறையில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு மாநில அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும்.
     ரூபாய் நோட்டு விவகாரத்தில் கிராமப்புற, நடுத்தர வர்க்க மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கருப்புப் பணம் ஒழிப்பு என்பது வரவேற்கத்தக்கது என்றாலும், அதற்காக மத்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை சரியாக கையாளவில்லை.
     அரசு ஊழியர்களுக்கு மூன்று மாத ஊதியத்தை அரசு ரொக்கமாக வழங்க வேண்டும். அரசு ஊழியர்கள் வீட்டு வாடகை உள்ளிட்ட செலவை சிரமமின்றி கையாள அரசு உதவிடவேண்டும். ராமேசுவரம் மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையால் தாக்கப்படுவது கண்டிக்கத்தக்கது. மீனவர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
     ரூபாய் நோட்டு விவகராத்தில் எதிர்க்கட்சிகள் மத்திய அரசைக் கண்டித்து நடத்தும் போராட்டத்துக்கு தமாகா ஆதரவளிக்கிறது. செவ்வாய்க்கிழமை (நவ.29) தமாகா மாவட்டத் தலைவர்கள் கூட்டம் நடைபெறுகிறது என்றார்.
     பேட்டியின்போது முன்னாள் எம்.பி.க்கள் என்.எஸ்.வி. சித்தன், ஏ.ஜி.எஸ். ராம்பாபு, மதுரை மாநகர் மாவட்ட தலைவர் பி. சேதுராமன், முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ்.கே. ராஜேந்திரன் உள்ளிட்டோர் இருந்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai