Enable Javscript for better performance
சேவாலய மாணவர்கள் விருப்பம் நிறைவேற்றம்- Dinamani

சுடச்சுட

    

    மதுரை நகரில் ஹரிசன சேவாலய விடுதியில் தங்கியுள்ள மாணவர்கள் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில், அவர்கள் தனியார் மாலுக்கு ஞாயிற்றுக்கிழமை அழைத்துச் செல்லப்பட்டனர்.
     வா நண்பா வா அமைப்பின் சார்பில் மதுரை டாக்டர் தங்கராஜ் சாலையில் உள்ள தமிழ்நாடு ஹரிசன சேவாலயா பள்ளியில் படிக்கும் சேவாலய விடுதி மாணவர்கள் 63 பேர் கோகலே சாலையில் உள்ள தனியார் மாலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.  அங்கு அவர்கள் அனைவரும், விரும்பிய கணினி விளையாட்டு உள்ளிட்ட கேளிக்கை மையங்களுக்குச் சென்று விளையாடினர். அவர்களுக்கு காலை உணவும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வா நண்பா வா அமைப்பின் செயலர் பி.சரவணன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai