Enable Javscript for better performance
தெப்பக்குளத்தில் நீர் தேக்கத் தயாராகும் மீனாட்சியம்மன் கோயில் நிர்வாகம்- Dinamani

சுடச்சுட

    

    தெப்பக்குளத்தில் நீர் தேக்கத் தயாராகும் மீனாட்சியம்மன் கோயில் நிர்வாகம்

    By DIN  |   Published on : 28th November 2016 08:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுரை தெப்பக்குளத்தில் வைகை ஆற்றிலிருந்து நீர் தேக்குவதற்கு அருள்மிகு மீனாட்சிசுந்தரேசுவரர் கோயில் நிர்வாகம் தயாராகி வருகிறது.
     இத்தெப்பக்குளத்தில் வைகை ஆற்றில் ஏ.வி.மேம்பாலத்தின் கீழிருந்து தனி கால்வாய் மூலம் தண்ணீரை நிரப்பலாம். ஆனால் அக்கால்வாயில் தற்போது கழிவுநீர் செல்கிறது. பிப்ரவரி மாதம் (தமிழில் தை மாதம்) தெப்பத் திருவிழாவுக்காக ஆண்டுதோறும் வைகை ஆற்றிலிருந்து மின் மோட்டார்கள் மூலம் தண்ணீர் எடுத்து தெப்பத்தில் தேக்குவது வழக்கம். இரவு பகலாக 6 மின்மோட்டார்கள் 40 நாள்கள் இயங்கினால் 6 அடிக்கு தெப்பத்தில் தண்ணீர் தேங்கும். அதற்காக ரூ.1.50 லட்சம் மின்கட்டணம் செலவாகும். தற்போது மழை பெய்யாத நிலையில், ஒரு மின்மோட்டார் மூலம் தெப்பத்திற்கு தண்ணீர் எடுக்கும் பணி தொடங்கியுள்ளது.
     இதுகுறித்து கோயில் செயல் அலுவலரும், இணை ஆணையருமான என்.நடராஜனிடம் கேட்ட போது, மழை பெய்து ஆற்றில் தண்ணீர் வந்தால், அதை தெப்பத்தில் நிரப்ப தயாராக உள்ளோம். தற்போது மின் மோட்டார்களை தயார்படுத்தும் பணிகளே நடந்து வருகின்றன என்றார்.
      இந்நிலையில் தெப்பத்துக்குள் அப்பகுதி மழை நீர் தேங்கும் வகையில் மழை நீர் சேமிப்பு வசதியை மாநகராட்சி மற்றும் கோயில் நிர்வாகம் மேற்கொள்வது அவசியம் எனபொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai