Enable Javscript for better performance
மதுரை-விருதுநகர் தண்டவாளப் பராமரிப்பு பணிகள்: 2 மணி நேரம் ரயில்கள் தாமதம்- Dinamani

சுடச்சுட

    

    மதுரை-விருதுநகர் தண்டவாளப் பராமரிப்பு பணிகள்: 2 மணி நேரம் ரயில்கள் தாமதம்

    By DIN  |   Published on : 28th November 2016 07:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருச்செந்தூர்- பாலக்காடு, திருநெல்வேலி- திருச்சி செல்லும் ரயில்கள் மதுரைக்கு ஞாயிற்றுக்கிழமை இரண்டு மணி நேரம் தாமதமாக வந்தன.
    மதுரை- விருதுநகர் இடையே ரயில்வே தண்டவாளப் பராமரிப்பு பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக அவ்வழியே இயக்கப்படும் சில ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை திருச்செந்தூர்- பாலக்காடு பயணிகள் ரயில் மற்றும் திருநெல்வேலியில் இருந்து திருச்சி செல்லும் இன்டர்சிட்டி விரைவு ரயில் ஆகிய ரயில்கள் இரண்டு மணி நேரத்துக்கும்  அதிகமாக தாமதமாக மதுரை ரயில் நிலையம் வந்தடைந்தன.
     மாலை 4 மணிக்கு மதுரை ரயில் நிலையம் வர வேண்டிய திருச்செந்தூர்- பாலக்காடு பயணிகள் ரயில் இரண்டரை மணி நேரம் தாமதமாக மாலை 6.35 மணிக்கு வந்தது. இதே போல மாலை 4.30 மணிக்கு மதுரை ரயில் நிலையம் வர வேண்டிய திருநெல்வேலி- திருச்சி இன்டர்சிட்டி விரைவு ரயில் இரண்டே கால் மணி நேரம் தாமதமாக மாலை 6.45 மணிக்கு மதுரை ரயில் நிலையம் வந்தது.
    இதுகுறித்து ரயில்வே நிர்வாகம் சார்பில் முன்னெச்சரிக்கையாக பயணிகளுக்கு தகவல் அறிவிக்கப்படாததால் கோபமடைந்த பயணிகள் ரயில்வே அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் ரயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai