Enable Javscript for better performance
வீட்டின் பூட்டை உடைத்து 4 பவுன் நகைத் திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    மதுரை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 4 பவுன் நகை மற்றும் ரூ.8 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்று விட்டதாக போலீஸில் சனிக்கிழமை புகார் அளிக்கப்பட்டுள்ளது.
     மதுரை அருகே உள்ள கருப்பாயூரணி வி.ஓடைப்பட்டியைச் சேர்ந்த நாச்சான் மகன் பாண்டி (40). விறகு உடைக்கும் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சனிக்கிழமை காலையில் பாண்டி வேலைக்கு சென்று விட்டாராம். மாலையில் வீடு திரும்பிய போது, பூட்டு உடைக்கப்பட்டிருந்ததாம். உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 4 பவுன் நகை, ரூ.8 ஆயிரம் பணம் ஆகியவை திருடப்பட்டிருந்ததாம்.
     இதுகுறித்து கருப்பாயூரணி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai