Enable Javscript for better performance
இ-சேவை மையங்களில் ஆதார் பதிவு பணி- Dinamani

சுடச்சுட

    

    மதுரை மாவட்டத்தில் அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனம் நடத்தும் 10 இ-சேவை மையங்களில் ஆதார் பதிவு பணி தொடங்கியுள்ளது.
    ஆதார் எண் வழங்குவதற்காக புகைப்படம், கருவிழி, ரேகை உள்ளிட்ட உடற்கூறுகள் பதிவு பணியை தனியார் நிறுவனம் செய்து வந்தது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள், மாநகராட்சி மண்டல அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்களில் இம் மையங்கள் செயல்பட்டு வந்தன.
    தற்போது ஆதார் பதிவு பணியை அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனம் நடத்தும் இ-சேவை மையங்களில் மேற்கொள்ள அனுமதி பெறப்பட்டுள்ளது. இதன்படி, மதுரை மாவட்டத்தில் 10 தாலுகா அலுவலகங்களிலும் உள்ள இ-சேவை மையங்களில் இப் பணி நடைபெற்று வருகிறது. வெள்ளிக்கிழமை வரை 219 பேருக்கு புகைப்படம் மற்றும் உடற்கூறுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
    பதிவுப் பணி இலவசமாக மேற்கொள்ளப்படுகிறது. ஏற்கெனவே ஆதார் எண் பெற்றவர்கள், அதில் உள்ள விவரங்களில் திருத்தம் செய்ய வேண்டுமெனில் இ-சேவை மையங்களிலேயே கட்டண அடிப்படையில் செய்து கொள்ளலாம்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai