Enable Javscript for better performance
உயர்கல்வியின் சவால்களை எதிர்கொள்ள புதிய உத்திகள் திருச்சபைகளின் தேசிய கவுன்சில் தலைவர் வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    உயர்கல்வியின் சவால்களை எதிர்கொள்ள புதிய உத்திகள் திருச்சபைகளின் தேசிய கவுன்சில் தலைவர் வலியுறுத்தல்

    By DIN  |   Published on : 08th October 2016 05:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உயர்கல்வியின் எதிர்கால சவால்களைச் சந்திப்பதற்கான உத்திகள் குறித்து ஆராய்ச்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்று இந்திய திருச்சபைகளின் தேசிய கவுன்சில் தலைவர் பி.சி.சிங் தெரிவித்தார்.
    அகில இந்திய கிறிஸ்துவ உயர்கல்வி நிறுவனங்கள் சங்கத்தின் பொன்விழா ஆண்டு நிறைவு விழா மதுரை அமெரிக்கன் கல்லூரியில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. அக்.11 ஆம் தேதி வரை நடைபெறும் இவ் விழாவின் தொடக்க நிகழ்ச்சியில், இந்திய திருச்சபைகளின் தேசிய கவுன்சில் தலைவர் பி.சி.சிங் பேசியது:
    அறிவுமிக்க, ஒழுக்கம் மிகுந்த, சமூக அர்ப்பணிப்பு, ஆன்மிக ஈடுபாடு கொண்ட குடிமக்களை உருவாக்குவதற்கு இந்த அமைப்பு பெரும் முயற்சி எடுத்து வருகிறது. ஆனால், இந்த நோக்கங்கள் மிகவும் பழமையானது என்பன உள்ளிட்ட பலதரப்பட்ட கருத்துக்கள் வரக்கூடும். ஆகவே, இன்றைய சூழலுக்கு ஏற்ப இந்த நோக்கங்களைப் புதுமைப்படுத்த வேண்டியது அவசியம்.
    நாட்டின் பொருளாதார முன்னேற்றம், திறன்மிக்க மனிதவளத்தை உருவாக்குதல், போட்டிகளைச் சமாளித்தல் போன்றவற்றில் பெரும் சவால்கள் வந்து கொண்டிருக்கின்றன. இவற்றை எதிர்கொள்வதற்கான உத்திகள் குறித்து சிந்திக்க வேண்டும். அதேநேரம் நமது பழமையான நோக்கங்களில் சமரசம் செய்து கொள்ள அவசியம் இல்லை.
    இன்றைய சூழலில் அறநெறிகளை பின்னுக்குத் தள்ளிவிட்டு பணத்தின் பின்னால் ஓடிக் கொண்டிருப்பது வேதனைக்குரியது. மேலும் முகநூல் போன்ற சமூக வலைத்தளங்கள் சமூகத்துடனான நேரடித் தொடர்பையே தவிர்த்து வருகின்றன. உயர்கல்வியில் வருங்காலங்களில் ஏற்படக் கூடிய மாற்றங்களைச் சிந்தித்து அதை எதிர்கொள்வதற்கான உத்திகளை இப்போதே ஆராய வேண்டும் என்றார்.
    மதுரை-ராமநாதபுரம் சிஎஸ்ஐ திருமண்டல ஆயர் எம்.ஜோசப், இந்திய திருச்சபைகளின் தேசிய கவுன்சில் பொதுச் செயலர் ரோஜர் கெய்க்வாட், அகில இந்திய கிறிஸ்துவ உயர்கல்வி நிறுவனங்கள் சங்கத்தின் தலைவர் ஆர்.டபிள்யு.அலெக்ஸாண்டர் ஜேசுதாசன், பொதுச் செயலர் டி.டேனியல் எழிலரசு, அமெரிக்கன் கல்லூரி முதல்வர் எம்.தவமணி கிறிஸ்டோபர் உள்ளிட்டோர் பேசினர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai