Enable Javscript for better performance
காவிரி பிரச்னையை தமிழக கட்சிகள் அரசியலாக்குகின்றன: தமிழிசை- Dinamani

சுடச்சுட

    

    காவிரி பிரச்னையை தமிழக கட்சிகள் அரசியலாக்குகின்றன: தமிழிசை

    By DIN  |   Published on : 08th October 2016 05:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காவிரி நதிநீர் பிரச்னையை தமிழக கட்சிகள் அரசியலாக்குகின்றன என, பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்திரராஜன் தெரிவித்தார்.
    சென்னையிலிருந்து வெள்ளிக்கிழமை மதுரை வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
    காவிரி பிரச்னையை தீர்ப்பதற்கு பாஜக அரசு முயற்சி எடுத்து வருகிறது. மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் வேண்டாம் எனக் கூறவில்லை. அதற்கு கால அவகாசமே கேட்கிறது. இதற்கு பிரதமர் மோடியை குறை சொல்வது எந்த வகையிலும் நியாமில்லை. தமிழக எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் காவிரிக்காக தமிழக எம்.பி.கள் ராஜிநாமா செய்யவேண்டும் எனக் கூறியுள்ளார். முதலில் அவருடைய கட்சி எம்.பி.க்கள் ராஜிநாமா செய்யட்டும். சனிக்கிழமை காவிரி பிரச்னைக்காக பாமக போராட்டத்தில் ஈடுபட உள்ளது. அவர்கள் கட்சி எம்.பி. ராஜிநாமா செய்வாரா? இந்தப் பிரச்னையை தமிழக கட்சியினர் அரசியலாக்குகின்றன.
    பண்டிகைக் காலங்களில் ஆம்னி பேருந்துகளில் கட்டணக் கொள்ளை அடிக்கின்றனர். அதை தமிழக அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது கண்டனத்திற்குறியது. தமிழகத்திலும் ஐ.எஸ். தீவிரவாதிகள் இருப்பது கவலைக்குரியது. தமிழகத்தில் இந்து அமைப்பினர் குறிவைத்து தாக்கப்படுவது கண்டனத்திற்குரியது என்றார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai