Enable Javscript for better performance
ஜெயராஜ் நாடார் மேல்நிலைப்பள்ளி வைர விழா: சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி மாரத்தான் போட்- Dinamani

சுடச்சுட

    

    ஜெயராஜ் நாடார் மேல்நிலைப்பள்ளி வைர விழா: சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி மாரத்தான் போட்

    By DIN  |   Published on : 08th October 2016 05:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஜெயராஜ் நாடார் மேல்நிலைப்பள்ளியின் வைர விழா ஆண்டை முன்னிட்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி பள்ளி மாணவர்கள் கலந்துகொண்ட மாரத்தான் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    தெப்பக்குளம் பகுதியில் உள்ள காமராஜர் சிலை முதல் ஜெயராஜ் நாடார் மேல்நிலைப்பள்ளி வரை நடைபெற்ற மாரத்தான் போட்டியை மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் துவக்கி வைத்தார். மதுரை மாவட்டத்தின் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட மாணவர்கள் போட்டியில் கலந்துகொண்டனர்.
    மேலூர் சருகுவலையப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் ஏ.ஆகாஷ், ஏ.செல்லத்துரை ஆகியோர் முதல் இரண்டு இடங்களைப் பிடித்தனர். இவர்களுக்கு முறையே ரூ.10 ஆயிரமும், ரூ.7 ஆயிரமும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது. மூன்றாமிடம் பிடித்த திருவேடகம் விவேகானந்தர் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த வி.தேவராஜுக்கு ரூ.5 ஆயிரம் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது. ஆறுதல் பரிசு பெற்ற 10 மாணவர்களுக்கு தலா ரூ.ஆயிரம் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.
    வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மதுரை மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா பரிசுகளை வழங்கினார். பள்ளிச் செயலர் பி.சுரேந்திரன், தலைவர் எஸ்.செல்வராஜ், மதுரை நாடார் உறவின்முறை பொதுச்செயலர் எஸ்.கே.மோகன், மதுரை நுகர்பொருள் மொத்த வியாபாரிகள் சங்கச் செயலர் கே.மோகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai