Enable Javscript for better performance
தனியார் நிறுவன ஊழியர் மாடியில் நின்று தற்கொலை மிரட்டல்- Dinamani

சுடச்சுட

    

    தனியார் நிறுவன ஊழியர் மாடியில் நின்று தற்கொலை மிரட்டல்

    By DIN  |   Published on : 08th October 2016 05:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மேலூர் அருகே ஊதியப் பிரச்னைக்காக தனியார் நிறுவன அலுவலக மாடியில் நின்று தற்கொலை மிரட்டல் விடுத்தவரை தீயணைப்பு மீட்புப்படையினர் உதவியுடன் மீட்டு மருத்துவமனையில் போலீஸார் சேர்த்தனர்.
    அரிட்டாபட்டி அருகே தனியார் ரப்பர் தொழில்சாலை உள்ளது. இங்கு நெல்லியேந்தல்பட்டியை சேர்ந்த ராஜேஷ்கண்ணா (42) ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்தாராம். வெள்ளிக்கிழமை அலுவலகம் வந்த ராஜேஷ்கண்ணா அவரது ஊதியப் பிரச்னையை தீர்த்துவைக்கக் கோரி தொழிற்சாலையின் அலுவலக மாடியில் ஏறிநின்று மிரட்டல் விடுத்தார். தான் விஷமருந்தை குடித்துவிட்டதாக கூச்சலிட்டார். தகவலறிந்த மேலூர் போலீஸார், தீயணைப்பு மீட்புப்படையினருடன் வந்து அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். மேலூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai