Enable Javscript for better performance
திருமணமான ஒரு மாதத்தில் தீக்குளித்த இளம்பெண் சாவு- Dinamani

சுடச்சுட

    

    பேரையூர் அருகே, திருமணமான ஒரு மாதத்தில் தீக்குளித்த இளம்பெண் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை இறந்தார்.
    விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள அச்சப்பட்டியைச் சேர்ந்த முருகன்(53). இவரது மகள் நாகலட்சுமி(20). இவருக்கும் பேரையூர் அருகே உள்ள கிளாங்குளத்தைச் சேர்ந்த முத்துமாரிக்கும் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
    திருமணத்துக்கு பின்பு கணவர் வீட்டில் வசித்து வந்த நாகலட்சுமி, செப்.30-ஆம் தேதி உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக்கொண்டார். இதில் பலத்த காயமடைந்த அவர் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை இறந்தார். சம்பவம் தொடர்பாக அவரது தந்தை முருகன் அளித்த புகாரின்பேரில் பேரையூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் திருமணமாகி ஒரு மாதமே ஆவதால் வருவாய் கோட்டாட்சியர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai