Enable Javscript for better performance
தூய ஜெபமாலை அன்னை ஆலய திருவிழா கொடியேற்றம்- Dinamani

சுடச்சுட

    

    மதுரை தூய ஜெபமாலை அன்னை ஆலய திருவிழா கொடியேற்றம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    டவுன்ஹால் சாலையில் உள்ள தூய ஜெபமாலை அன்னை ஆலயத் திருவிழா வெள்ளிக்கிழமை தொடங்கி அக்டோபர் 16 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த விழாவை மதுரை உயர் மறை மாவட்ட பேராயர் அந்தோணி பாப்புசாமி கொடியேற்றித் தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து சிறப்பு திருப்பலியும், நற்கருணை பவனியும் நடைபெற்றது.
    இந்த திருவிழாவையொட்டி தினமும் சிறப்பு திருப்பலி நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
    விழாவின் நிறைவு நாளான அக்டோபர் 16 ஆம் தேதி மதுரை உயர்மறை மாவட்ட முன்னாள் பேராயர் பீட்டர் பெர்னாண்டோ சிறப்பு திருப்பலி நடத்தி, ஜெபமாலை அன்னையின் அலங்காரத் தேர் பவனியைத் தொடங்கி வைக்கிறார். கிறிஸ்துவ மதத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமின்றி பிற சமயங்களைச் சேர்ந்த பலரும் இந்த விழாவைக் கொண்டாடுகின்றனர். ஒவ்வொரு சனிக்கிழமையும் இந்த ஆலயத்தில் சமயவேறுபாடின்றி சகாய அன்னையை பிரார்த்தனை செய்து வருகின்றனர் என்று தூய ஜெபமாலை அன்னை ஆலய பங்குத் தந்தை ஜான் பிரிட்டோ பாக்கியராஜ் தெரிவித்துள்ளார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai