Enable Javscript for better performance
நூலக இடம் ஆக்கிரமிப்பு: நகராட்சிக்கு கண்டனம்- Dinamani

சுடச்சுட

    

    உயர்நீதிமன்ற உத்தரவுப்படி மேலூரில் பொது நூலகம் கட்ட ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் நகராட்சி கழிப்பறை கட்டுவதை தடுத்து நிறுத்துமாறு மாவட்ட ஆட்சியருக்கு நூலக வாசகர் வட்டத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    மேலூரில் பல ஆண்டுகளாக பொது நூலகம் வாடகைக் கட்டடத்தில் இயங்கி வருகிறது. கட்டடத்தை காலி செய்யுமாறு அதன் உரிமையாளர் வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில், நூலகத்துக்கு கட்டடம் கட்ட இடம் ஒதுக்கித் தரக் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொது நல வழக்குத் தொடரப்பட்டது. இதையடுத்து மாவட்ட நிர்வாகம் மேலூர் சிவன் கோயில் அருகே இடம் ஒதுக்கிக் கொடுத்தது. பொதுப்பணித்துறை கட்டுமானப் பணிகளை செய்துவருகிறது.
    இந்நிலையில், கட்டடத்துக்காக ஒதுக்கப்பட்ட பகுதியில் கழிப்பறை கட்ட மேலூர் நகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.
    இதனால் நூலகத்தின் சுகாதாரம் பாதிக்கப்படும். சிவன் கோயில் சுவற்றின் அருகே ஏற்கெனவே, கழிப்பறை இருந்த இடத்தில் புதிய கழிப்பறையை கட்டவேண்டும்.
    பொது நூலகத்துக்கான இடத்தை ஆக்கிரமித்து கழிப்பறை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என பொது நூலக வாசகர் வட்டத்தினர் மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai