Enable Javscript for better performance
பெண் தூக்கிட்டு தற்கொலை: சாவில் மர்மம் இருப்பதாகதந்தை புகார்- Dinamani

சுடச்சுட

    

    பெண் தூக்கிட்டு தற்கொலை: சாவில் மர்மம் இருப்பதாக தந்தை புகார்

    By DIN  |   Published on : 08th October 2016 05:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராமநாதபுரம் மாவட்டம் கீதையன்கோட்டையைச் சேர்ந்தவர் ராஜேந்திரன்(50). இவரது இரண்டாவது மகள் சுகன்யாவுக்கும்(24), மதுரை கருப்பாயூரணியைச் சேர்ந்த கொத்தனார் வேலை பார்த்து வரும் லிங்கபிரபு என்பவருக்கும் 2015 மார்ச் மாதம் திருமணம் நடைபெற்றது.
    இதில் இவர்களுக்கு 10 மாத பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் சுகன்யா கணவர் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக ராஜேந்திரனுக்கு வியாழக்கிழமை தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பேரில் அவர் கருப்பாயூரணிக்கு சென்று பார்த்தபின் கருப்பாயூரணி காவல்நிலையத்தில் மகள் சாவில் மர்மம் இருப்பதாக புகார் தெரிவித்துள்ளார். அதன்பேரில் போலீஸார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai