Enable Javscript for better performance
மின்சாரம் பாய்ந்து கட்டடத் தொழிலாளர்கள் 2 பேர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    மதுரையில் வெள்ளிக்கிழமை கட்டட வேலையின்போது, மின்சாரம் தாக்கியதில் தொழிலாளர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
    மதுரை பழங்காநத்தம் விகேபி நகரைச் சேர்ந்தவர் அன்னபூரணி. இவரது வீட்டின் மாடியின் சீரமைப்பு வேலைக்காக பழங்காநத்தம் வடக்குத்தெருவை சேர்ந்த சண்முகம், ராமச்சந்திரன் ஆகியோர் வெள்ளிக்கிழமை வந்துள்ளனர்.
    அன்னபூரணி வீட்டின் மாடியில் உயர்மின் அழுத்த கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்வதாகக் கூறப்படுகிறது. மாடியின் கதவைத் திறந்தாலே மின்கம்பி மீது படும் அபாயம் இருந்துள்ளது.
    இதை அறியாத தொழிலாளர்கள் மாடிக்குச் சென்றுள்ளனர். அங்கு முதலில் சென்ற ராமச்சந்திரன் கதவை வேகமாகத் திறந்துள்ளார். இதில் கதவு மின்கம்பி மீது பட்டு ராமச்சந்திரன் மீது மின்சாரம் பாயந்துள்ளது. அதிர்ச்சியில் அவர் மின்கம்பி மீதே விழுந்துள்ளார். அவரின் சப்தத்தைக் கேட்டு பின்னால் நின்ற சண்முகம், ராமச்சந்திரனைக் காப்பாற்றுவதற்காக அவரது காலை பிடித்து இழுத்துள்ளார். அப்போது அவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
    இதையடுத்து மின்வாரியத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டு, மின்விநியோகம் துண்டிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்குச் சென்ற தீயணைப்புப் படையினர் இருவரது சடலங்களையும் மீட்டனர்.
    சம்பவம் தொடர்பாக எஸ்.எஸ்.காலனி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai