Enable Javscript for better performance
முதியவர் கவனத்தை திசை திருப்பி ரூ.1.80 லட்சம் பணம் திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    முதியவர் கவனத்தை திசை திருப்பி ரூ.1.80 லட்சம் பணம் திருட்டு

    By DIN  |   Published on : 08th October 2016 05:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உசிலம்பட்டியில் முதியவரின் கவனத்தை திசை திருப்பி ரூ.1.80 லட்சம் பணத்தை இரு சக்கர வாகனத்தில் வந்தவர்கள் திருடிச்சென்றதாக வியாழக்கிழமை புகார் செய்யப்பட்டுள்ளது.
    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள அன்னம்பார்பட்டியைச் சேர்ந்தவர் சுப்ரமணி(74). இவர் உசிலம்பட்டியில் உள்ள வங்கிக்கிளைக்கு சென்று, தனது மகள் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.1 லட்சமும், தனது கணக்கில் இருந்து ரூ.80 ஆயிரம் பணமும் எடுத்துக் கொண்டு மஞ்சள்பையில் வைத்து சைக்கிளில் வியாழக்கிழமை வீடு திரும்பியுள்ளார். எஸ்ஓஆர் நகர் பிரிவில் சென்றபோது, அவருக்கு பின்னால் இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள், சைக்கிளில் இருந்து பணம் கீழே சிதறிக் கிடப்பதாக தெரிவித்தனராம்.
    இதையடுத்து சுப்ரமணி கீழே பார்த்தபோது, ரூபாய் நோட்டுகள் கிடந்துள்ளன. தன்னுடைய பணம் தான் கீழே விழுந்துள்ளது என்ற நினைத்து சுப்ரமணி பதற்றத்தில் பணப்பையை சைக்கிளிலேயே வைத்துவிட்டு கீழே கிடந்த ரூபாய் நோட்டுகளை எடுத்துள்ளார். அப்போது இரு சக்கர வாகனத்தில் இருந்த நபர்கள் ரூ. 1.80 லட்சம் பணம் இருந்த பையை எடுத்துக் கொண்டு தப்பிச்சென்று விட்டனர். சுப்ரமணி அளித்த புகாரின்பேரில் உசிலம்பட்டி நகர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai