Enable Javscript for better performance
வடகிழக்கு பருவமழை: வட்டாட்சியர் அலுவலகங்களில் கட்டுப்பாட்டு அறை- Dinamani

சுடச்சுட

    

    வடகிழக்கு பருவமழை: வட்டாட்சியர் அலுவலகங்களில் கட்டுப்பாட்டு அறை

    By DIN  |   Published on : 08th October 2016 05:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வடகிழக்குப் பருவமழை தொடங்குவதையொட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை அமைக்க மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் உத்தரவிட்டுள்ளார்.
    வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாடுகள் குறித்த அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்தில் பேசிய ஆட்சியர் கொ.வீரராகவ ராவ், அதிக மழையால் ஏற்படக் கூடிய பாதிப்புகள் குறித்து வட்டாட்சியர்கள் உடனுக்குடன் தகவல் தெரிவிக்க வேண்டும். சாலைகள், மின்கம்பங்கள் சீரமைப்புப் பணிகளை துரிதமாக மேற்கொள்வதுடன், பயிர் மற்றும் பொதுமக்களின் உடைமைகளுக்கு சேதங்கள் ஏற்படுத்த தடுக்க உரிய நடவடிக்கைகளைச் செய்ய வேண்டும்.
    மழைநீர் வடிகால், வாய்க்கால்களில் மழைநீர் தடையின்றிச் செல்லும் வகையில் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள், பொதுப்பணித் துறையினர் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார். மதுரை மாநகராட்சி ஆணையர் சந்தீப் நந்தூரி, மாவட்ட வருவாய் அலுவலர் கே.வேலுச்சாமி மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai