Enable Javscript for better performance
100 கிலோ காய்கறியில் அம்மனுக்கு அலங்காரம்- Dinamani

சுடச்சுட

    

    திருநகர் சித்தி விநாயகர் திருக்கோயிலில் நவராத்திரி விழா 6 ஆம் நாளான வெள்ளிக்கிழமை அம்மனுக்கு 100 கிலோ எடையில் சாகம்பரி அலங்காரம் செய்யப்பட்டது.
    திருநகர் அருள்மிகு சித்திவிநாயகர் திருக்கோயிலில் நவராத்திரி விழா கடந்த 2 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவினையொட்டி தினமும் அம்மன் பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். விழாவின் 6 ஆம் நாளான வெள்ளிக்கிழமை சுமார் 100 கிலோ அளவில் தக்காளி, புடலங்காய், வெண்டைக்காய், பச்சை மிளகாய் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகளைக் கொண்டு சாகம்பரி அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அம்மனுக்கு சிறப்பு பூஜையும், சிறப்பு தீப தூப ஆராதனைகளும் நடைபெற்றன. இதில் பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி சுரேஷ்கண்ணன், கணக்கர் இதயராஜ், ஹரிபட்டர் உள்ளிட்ட கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai