Enable Javscript for better performance
அமெரிக்கன் கல்லூரியில் பட்டமளிப்பு விழா- Dinamani

சுடச்சுட

    

    அமெரிக்கன் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் 550 மாணவர்கள் பட்டம் பெற்றனர்.
     இதில், பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) இணைச் செயலர் ஜி.ஸ்ரீநிவாஸ் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கிப் பேசியது: ஒவ்வொரு இந்தியருக்கும் தரமான கல்வி அவசியம். கல்வி பெற்றால் தெளிவான சிந்தனை பிறக்கும். இதன்மூலம் ஆக்கப்பூர்வமான செயல்கள் நிறைவேறும். ஆசிரியர்கள் அல்லாமல் மாணவர்களின் வெற்றி முழுமை அடையாது. மாணவர்கள் ஏதேனும் ஒரு தருணத்தில் தங்கள் கல்லூரியுடன் தொடர்பு கொண்டிருத்தல் வேண்டும் என்றார்.
     கல்லூரியைச் சேர்ந்த 305 இளங்கலை மாணவர்கள், 196 முதுகலை மாணவர்கள், 49 எம்பில் மாணவர்கள் என்று மொத்தம் 550 மாணவர்கள் பட்டம் பெற்றனர். கல்லூரி முதல்வர் எம்.தவமணி கிறிஸ்டோபர், பேராயர் எம்.ஜோசப், துணை முதல்வர் ஜி.சி.ஆபிரஹாம், நிதிக்காப்பாளர் ஜெ.ஹெலன் ரத்ன மோனிகா மற்றும் பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai