Enable Javscript for better performance
இரு சக்கர வாகன விபத்து: வங்கி ஊழியர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    அலங்காநல்லூர் அருகே வியாழக்கிழமை நின்று கொண்டிருந்த லாரி மீது இரு சக்கர வாகனம் மோதிய விபத்தில் ஊழியர் உயிரிழந்தார்.   
      பாலமேட்டைச் சேர்ந்த மாணிக்கம் மகன் கார்த்திக் (29), தனியார் வங்கி ஒன்றில் பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி, ஒரு வயதில் மகன் உள்ளனர். வியாழக்கிழமை மாலை கார்த்திக் பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பும்போது, சின்னஊர்சேரி அருகே சாலை ஒரத்தில் நின்ற லாரியில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பலத்த காயமடைந்த அவர் மதுரை அரசு  மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  
     இந்த விபத்து தொடர்பாக அலங்காநல்லூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai