Enable Javscript for better performance
இளைஞர் எழுச்சி நாள் பேரணி- Dinamani

சுடச்சுட

    

    மதுரையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இளைஞர் எழுச்சி நாள் பேரணியில் ஏராளமான பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.
    குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாமின் பிறந்த நாளை இளைஞர் எழுச்சி நாளாகக் கொண்டாட பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டிருந்தது. இதையொட்டி பேரணி, கலைப் போட்டிகள், அறிவியல் கண்காட்சி நடத்தவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
    இதன்படி, மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளில் இளைஞர் எழுச்சி நாள் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
    பள்ளிக் கல்வித் துறையின் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் நடைபெற்ற பேரணியை முதன்மைக் கல்வி அலுவலர் ஜோ.ஆஞ்சலோ இருதயசாமி தொடக்கி வைத்தார். இளங்கோ மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் பேரணி நிறைவு பெற்றது.
    மாவட்டக் கல்வி அலுவலர்கள் லோகநாதன், முருகானந்தம், ரேணுகா, முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் அதிராமசுப்பு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். காந்தி நினைவு அருங்காட்சியகம் அருகே இருந்து தொடங்கிய இப் பேரணியில் ஏராளமான பள்ளி மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். இளைஞர் எழுச்சி நாளையொட்டி சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.  
    கல்லூரி மாணவியர் ரத்த தானம்:    இளைஞர் எழுச்சி நாளையொட்டி டோக் பெருமாட்டி கல்லூரியில் ரத்த தான முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம், ரோட்ராக்ட் சங்கம், செஞ்சுருள் சங்கம் ஆகியன மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையுடன் இணைந்து இந்த முகாமை ஏற்பாடு செய்திருந்தன. கல்லூரி துணை முதல்வர் கிறிஸ்டியானா சிங் முகாமைத் தொடக்கி வைத்தார். கல்லூரியின் பேராசிரியர்கள், மாணவியர், அலுவலகப் பணியாளர்கள் உள்பட 76 பேர் ரத்த தானம் செய்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai