Enable Javscript for better performance
உதவிப் பேராசிரியர் எழுத்துத் தேர்வு: டிஆர்பி இணை இயக்குநர் ஆலோசனை- Dinamani

சுடச்சுட

    

    உதவிப் பேராசிரியர் எழுத்துத் தேர்வு: டிஆர்பி இணை இயக்குநர் ஆலோசனை

    By DIN  |   Published on : 15th October 2016 05:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரசுப் பொறியியல் கல்லூரி உதவிப் பேராசிரியர் நியமன எழுத்துத் தேர்வு குறித்து மதுரையில் ஆசிரியர் தேர்வு வாரிய இணை இயக்குநர் குப்புசாமி வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினார்.
     அரசுப் பொறியியல் கல்லூரிகளில் காலியாக இருக்கும் 192 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாகப் பூர்த்தி செய்யப்பட உள்ளன. இதற்கான எழுத்துத் தேர்வு அக்.22 ஆம் தேதி நடைபெறுகிறது. மதுரையில் 12 மையங்களில் இத் தேர்வு நடைபெற உள்ளது.
     இந்த தேர்வுக்கான முன்னேற்பாடுகள் குறித்து கல்வித் துறை அலுவலர்களுடன் ஆசிரியர் தேர்வு வாரிய இணை இயக்குநர் குப்புசாமி வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினார். முதன்மைக் கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி, மாவட்டக் கல்வி அலுவலர்கள், தேர்வு மையங்களின் முதன்மைக் கண்காணிப்பாளர்கள், தேர்வு அறை கண்காணிப்பாளர்கள் பங்கேற்றனர்.
     தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள், தேர்வு அறை கண்காணிப்பாளர்களின் பணிகள் குறித்து இணை இயக்குநர் குப்புசாமி அறிவுரை வழங்கினார். முந்தைய தேர்வுகளின்போது சில இடங்களில் முறைகேடுகள் நடந்ததைச் சுட்டிக்காட்டிய அவர், அத்தைகய முறைகேடுகளுக்கு இடம்தரக் கூடாது என அறிவுறுத்தினார்.
     ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் இந்த தேர்வில் முதல் முறையாக காவல் துறை மூலமாக விண்ணப்பதாரர்கள் சோதனை செய்யப்பட உள்ளனர். அதேபோல, தேர்வு மைய வளாகத்திலும், தேர்வு அறையிலும் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று தேர்வுப் பணி அலுவலர்களை அறிவுறுத்தினார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai