Enable Javscript for better performance
ஊர்க்காவல் படைக்கு ஆள்கள் தேர்வு- Dinamani

சுடச்சுட

    

    மதுரை மாவட்ட ஊர்க்காவல் படைக்குத் தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
     மதுரை ஊரகக் காவல் கண்காணிப்பாளர் விஜயேந்திர பிதாரி வெள்ளிக்கிழமை விடுத்துள்ள அறிக்கை:
     மதுரை மாவட்ட ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆள்கள் தேர்வு நடைபெற உள்ளது. இதில், 10-ஆம் வகுப்புத் தேர்ச்சி மற்றும் 18 முதல் 45 வயதுக்குள்பட்ட, சேவை மனப்பான்மை உள்ள ஆண், பெண் இருபாலர்களும் விண்ணப்பிக்கலாம்.
     மதுரை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் உள்ள ஊர்க்காவல் படை அலுவலகத்தில் அக்.17,18,19-ஆகிய தேதிகளில், நேரில் சென்று விண்ணப்பத்தை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பித்தவர்களுக்கு அக்.22-ஆம் தேதி மேலூர் காவல் நிலையத்திலும், அக். 23-ஆம் தேதி சமயநல்லூர் காவல் நிலையத்திலும் தேர்வு நடைபெறும் என அதில் தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai